×

கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட திமுக நிர்வாகிகள் 5 பேர் நீக்கம்: துரைமுருகன் நடவடிக்கை

சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட நிர்வாகிகள் 5 பேரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராகவும், திமுகவினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும் செயல்பட்ட திருப்பூர் கிழக்கு மாவட்டம்.

காங்கேயம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் சூரியபிரகாஷ், தேனி வடக்கு மாவட்டம் தேனி நகர பொறுப்பாளர் டி.பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் எஸ்.பி.முரளி, போடி நகரச் செயலாளர் மா.வீ.செல்வராஜ், நீலகிரி மாவட்டம், கூடலூர் ஒன்றியம், தேவர் சோலை பேரூர்க் கழக செயலாளர் பி.மாதேவ் ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Pimuka , 5 DMK executives sacked for violating party control: Duraimurugan action
× RELATED புதிய உறுப்பினர்கள் சேர்க்கை திமுக செயல்வீரர் கூட்டத்தில் முடிவு